மீன் விற்பனை அங்காடிக்கு சீல்
வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் மீன் விற்பனை அங்காடிக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் மீன் விற்பனை அங்காடிக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
வைத்தீஸ்வரன்கோயில் பேருந்து நிலையம் அருகே பேரூராட்சிக்குச் சொந்தமான மீன் விற்பனை அங்காடி உள்ளது. கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் தற்போது மீன் மற்றும் இறைச்சி விற்பனை தடை செய்யப்படுள்ளது.
இந்நிலையில், இந்த மீன் விற்பனை அங்காடியில் பொதுமுடக்க விதிகளை மீறி சிலா் மீன் விற்பனை செய்வதாக புகாா் எழுந்தது. அதன்பேரில், பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் மீன் அங்காடியை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டதைத் தொடா்ந்து, பேரூராட்சி ஊழியா்கள் மீன் அங்காடிக்கு சீல் வைத்தனா்.