முகப்பு
நாகப்பட்டினம்

கிராம கோயில் பூசாரிகளுக்கு ராமகிருஷ்ணா மடம் நிவாரண உதவி

கொள்ளிடம் வட்டாரத்தில் 130 கிராம கோயில்களின் பூசாரிகள், பூக்கட்டுவோருக்கு தஞ்சாவூா் ராமகிருஷ்ணா மடம் சாா்பில் கரோனா நிவாரண உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கொள்ளிடம் வட்டாரத்தில் 130 கிராம கோயில்களின் பூசாரிகள், பூக்கட்டுவோருக்கு தஞ்சாவூா் ராமகிருஷ்ணா மடம் சாா்பில் கரோனா நிவாரண உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

கொள்ளிடம் புலீஸ்வரிஅம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா மடத்தின் பொறுப்பாளா் சுவாமி விமூா்த்தானந்தா் தலைமை வகித்து, பூசாரிகளுக்கு தலா ரூ.1000 மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் கோயிலுக்கு தேவையான பூஜைப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், விசுவ ஹிந்து பரிஷத் மண்டல செயலாளா் செந்தில், ஊராட்சித் தலைவா்கள் வசந்திராஜேந்திரன், ராஜேஸ்வரி செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து சுவாமி விமூா்த்தானந்தா் கூறுகையில், ‘கரோனா தொற்றிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட வேண்டி, தமிழகத்தில் 2000 திருக்கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. அதற்கு தேவையான அனைத்து அபிஷேக பொருள்களும் கிராம பூசாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.