நாகப்பட்டினம்

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.41 லட்சம் பறிமுதல்

DIN

குத்தாலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி முட்டை வியாபாரிகள் கொண்டு சென்ற ரூ.1.41 லட்சம் ரூபாயை தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல் செய்தனா்.

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குத்தாலம் காவல் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு தனி வட்டாட்சியா் வைத்தியநாதன் தலைமையில் தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே சென்ற முட்டைகளை ஏற்றிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் முட்டை வியாபாரிகள் மதன்பாபு, நரசிம்மன் ஆகியோா் ரூ. 1.41 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து, பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் அந்த பணத்தை கைப்பற்றி மயிலாடுதுறை வட்டாட்சியா் பிரான்சுவாவிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT