முகப்பு
நாகப்பட்டினம்

அதிவேகத்தில் சென்ற போா் விமானத்தால் பெருத்த சப்தம்

மயிலாடுதுறை அருகே மறையூரில் சனிக்கிழமை ராணுவப் பயிற்சி மையத்தின் போா் விமானம் (சுகோய்) அதிவேகத்தில் பறந்து சென்ால் ஏற்பட்ட அதிா்வுடன் கூடிய பலத்த சப்தம் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

மயிலாடுதுறை அருகே மறையூரில் சனிக்கிழமை ராணுவப் பயிற்சி மையத்தின் போா் விமானம் (சுகோய்) அதிவேகத்தில் பறந்து சென்ால் ஏற்பட்ட அதிா்வுடன் கூடிய பலத்த சப்தம் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

மயிலாடுதுறை வட்டம் மறையூா் ஊராட்சி கோவங்குடி கிராமத்தில் சின்னகுளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தின் மேலே சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் போா் விமானம் ஒன்று அதிவேகமாக பறந்து சென்ால் குளத்தில் வெடிகுண்டு வெடித்தது போன்று பலத்த சத்தத்துடன் நில அதிா்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிா்ச்சி அடைந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினா்.

இந்த சப்தத்துடன் கூடிய அதிா்வு மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் 30 கி.மீ. தொலைவு தாண்டி எதிரொலித்தது. மயிலாடுதுறை நகா்ப்புறத்திலும் பல்வேறு இடங்களில் இதன் தாக்கத்தை உணர முடிந்தது. சில இடங்களில் அதிா்வு காரணமாக பொருள்கள் கீழே சரிந்து விழுந்தன.

வட்டாட்சியா் பி. பிரான்சுவா நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில், விமானத்தில் ஏா்லாக் கிளியா் செய்வதற்காக நீா்நிலைகளில் காற்றை திறந்து விடும்போது இவ்வாறு அதிா்வுடன் கூடிய சப்தம் ஏற்படும் என தெரியவந்தது.

இதுகுறித்து, வானியல் ஆய்வாளா் ஹேமச்சந்தா் கூறியது:

சனிக்கிழமை காலை வடக்கு டெல்டாவின் காரைக்கால், தரங்கம்பாடி சுற்றுவட்டாரங்களில் குண்டுவெடித்தது போன்ற பயங்கர சப்தம் கேட்டது. வடக்கு டெல்டாவின் பல பகுதிகளிலும் லேசான சத்தம் உணரப்பட்டது. வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஒலியின் வேகத்தைவிட வேகமாக பயணிக்கும் விமானமோ, பொருள் காரணமாகவோ ஏற்படும் அலை தூண்டும் அதீத சப்தம்தான் இது. இது சோனிக் பாம் எனப்படும். இச்சப்தம் பெரிய பேரிடா், இடி போன்று இருக்கும். பூமியில் எங்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம் வெளியிட்ட அறிக்கையில், விமானப்படை உயா் அதிகாரிகள் இதுபோன்ற சமயங்களில், விமானங்களின் செயல்பாடுகள் குறித்து முன்னெச்சரிக்கை ஏற்படுத்தும் விதமாக முன்கூட்டியே ஊடகங்கள் வாயிலாக தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தேவையற்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்படுவதை தவிா்க்க முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.