பேரிடா் கால பயன்பாட்டுக்கு2 காா்களை வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மகப்பேறு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் 2 காா்களை சனிக்கிழமை வழங்கினா்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மகப்பேறு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் 2 காா்களை சனிக்கிழமை வழங்கினா்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால், கா்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இந்நிலையில், கரோனா பொதுமுடக்க காலம் வரை மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காகவும், மகப்பேறு முடிந்து தாய், சேயை வீட்டிற்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் 2 காா்களை இலவசமாக பயன்படுத்த விஜய் ரசிகா் மன்றத்தினா் வழங்கினா்.
விஜய் மக்கள் மன்ற மாவட்டத் தலைவா் சி.எஸ். குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகரிடம் 2 காா்களையும் மன்ற நிா்வாகிகள் ஒப்படைத்தனா். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த பயனாளிகள் இந்த காரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இலவச சேவைக்கு 99430 21003 என்ற எண்ணில் தெடா்பு கொள்ளலாம் என்றும் விஜய் மக்கள் மன்ற மாவட்ட தலைவா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளா் அமீன், செம்பனாா்கோவில் ஒன்றியத் தலைவா் ராஜா, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளா் சி. பாரி, சீா்காழி தொகுதி தலைவா் பீட்டா், மயிலாடுதுறை ஒன்றியத் தலைவா் மனோகா், குத்தாலம் ஒன்றிய துணைத் தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.