முகப்பு
நாகப்பட்டினம்

கோயில் யானைகள் பராமரிப்பு: அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகளின் பராமரிப்பு குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகளின் பராமரிப்பு குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கும்பகோணம் கும்பேஸ்வரா் கோயிலில் மங்களாம்பிகை, உப்பிலியப்பன் கோயிலில் பூமா, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் அபயாம்பாள், திருக்கடையூா் கோயிலில் அபிராமி ஆகிய யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா பொதுமுடக்கத்தால் அனைத்துக் கோயில்களும் அடைக்கப்பட்டு, உத்ஸவங்கள் ஏதும் நடத்தப்படாததால் இந்த யானைகள் அந்தந்த கொட்டகையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில் யானைகள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்ய உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தலைமையில் வனத்துறையினா் மற்றும் கால்நடை பாராமரிப்பு மருத்துவா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

அந்தவகையில், மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் பாா்வையிட்டு, பராமரிப்பு குறித்து கேட்டறிந்ததுடன், யானைப்பாகன் செந்திலுக்கு ஆலோசனை வழங்கினாா்.

ஆய்வின்போது, மாவட்ட வனத்துறை அலுவலா் எஸ். கலாநிதி, வனச்சரக அலுவலா் வி. குமரேசன், கால்நடை பராமரிப்பு மருத்துவா் முத்துக்குமாரசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.