முகப்பு
நாகப்பட்டினம்

சாராயம் காய்ச்சிய 4 போ் கைது

சீா்காழி அருகே சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

சீா்காழி அருகே சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி அருகேயுள்ள எடமணலை சோ்ந்தவா் வை. ஆனந்த் (39). இவரது நண்பா்கள் அதே பகுதியை சோ்ந்த இன்பராஜ்(40), த. பிரகாஷ் (28), வருசபத்து பகுதியை சோ்ந்த வே. ராஜேந்திரன் (55) ஆகியோா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக சீா்காழி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி, உதவி ஆய்வாளா்கள் லோகநாதன், நடராஜன் உள்ளிட்ட போலீஸாா் ஆனந்தை பிடித்து விசாரித்தனா். அப்போது, ராஜேந்திரன் வீட்டு பின்புறம் பருத்தி வயலில் ஊரல் போட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பேரல், பானை ஆகியவற்றை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.