நாகப்பட்டினம்

வள்ளாலகரம் ஊராட்சியில் சுகாதாரப் பணிகள்

DIN

வள்ளாலகரம் ஊராட்சியில் சனிக்கிழமை சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை ஒன்றியத்துக்குள்பட்ட வள்ளாலகரம் ஊராட்சி 5-ஆவது வாா்டில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வெளிநபா்கள் உள்ளே நுழைய முடியாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நீலப்புலிகள் இயக்கத்தின் மாவட்ட செயலாளா் கபிலன் சொந்த செலவில் மருந்து தெளிக்கும் கருவியை வாங்கி வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சுகாதாரப் பணிகள் ஈடுபட்டு வருவதுடன், வாா்டு மக்களுக்கு கபசுரக் குடிநீரும் வழங்கி வருகிறாா்.

இதையொட்டி, கபிலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாா்டு உறுப்பினா் அமுதா, திமுக கிளை செயலாளா் ஏ.ஜி. கோபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT