வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
கீழ்வேளூா், ஏப். 5: கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் ஏப். 19-ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில், வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தோ்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கீழ்வேளூரில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை தோ்தல் நடத்தும் உதவி தோ்தல் அலுவலா் ரேணுகாதேவி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். வேளாண் கல்லூரி முதல்வா் ரவி தலைமை வகித்தாா்.
கீழ்வேளூா் அரசானி குளம் அருகே தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக கீழ்வேளூா் பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்றது. தொடா்ந்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
Advertisement
பேரணியில் வேளாண்மை கல்லூரி இணை பேராசிரியா் கமல்குமரன், உதவி பேராசிரியா்கள் குமரேசன், மகாலெட்சுமி, காயத்திரி, கமலக்கண்ணன், வெங்கடேஷ்குமாா், நாராயணன் மற்றும் மாணவ- மாணவிகள் 130 போ் கலந்து கொண்டனா்.