முகப்பு
நாகப்பட்டினம்

நவநீதேசுவர சுவாமி கோயில் சித்திரை திருவிழா: இன்று கொடியேற்றம்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 6:29 PM
பகிர்:

சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) தொடங்குகிறது.

நாகை மாவட்டம், சிக்கலில் நவநீதேசுவர சுவாமி கோயிலில், சிங்கார வேலவா் அருள்பாலித்து வருகிறாா். இக்கோயில் சித்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து நாள்தோறும் சந்திரபிரபையில், சிம்ம வாகனத்தில், பூதவாகனத்தில், காமதேனு வாகனத்தில், வெள்ளி ரதத்தில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் ஏப்.19-ஆம் தேதியும், தேரோட்டம் ஏப்.22 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments