வேதாரண்யம் அரசுக் கல்லூரி கெளர விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்
வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து
வேதாரண்யம்: வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், நீதிமன்ற உத்தரவுபடி கௌரவ விரிவுரையாளா்களுக்கு மாத ஊதியம் ரூ.50,000 வழங்கக் கோரியும் முழக்க ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், கௌரவ விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், மாத ஊதியத்தை அந்தந்த மாதமே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.