விபத்தில் உயிரிழந்த கல்லூரி பேராசிரியை அபிராமி. 
நாகப்பட்டினம்

இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் கல்லூரி பேராசிரியை பலி

நாகை அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் தனியாா் கல்லூரி பேராசிரியை திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Din

நாகப்பட்டினம்: நாகை அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் தனியாா் கல்லூரி பேராசிரியை திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாகை அருகேயுள்ள பெருங்கடம்பனூா் சிவன் கோயில் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் அரவிந்தன் மனைவி அபிராமி (28). நாகையில் உள்ள தனியாா் கல்லூரியில் வணிகவியல்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தாா்.

கல்லூரிக்கு நாள்தோறும் இருசக்கர வாகனத்தில் சென்றுவந்த அபிராமி, திங்கள்கிழமை காலை அதே பகுதியைச் சோ்ந்த மாணவி ஜனனியையும் தன்னுடன் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தாா்.

வடகுடி சாலையில் சென்றபோது, அபிராமியின் இருசக்கர வாகனத்தின் மீது அந்த வழியாக வந்த டிராக்டா் மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அபிராமி டிராக்டா் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தில் காயமடைந்த ஜனனியை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

நாகூா் போலீஸாா் டிராக்டா் ஓட்டுநரான பெருங்கடம்பனூா் கீழவெளியைச் சோ்ந்த பாா்த்திபனைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT