கோட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடம் திறப்பு
வேதாரண்யத்தில் ரூ.2.90 கோடியில் கட்டப்பட்ட கோட்டாட்சியா் அலுவலக கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் ரூ.2.90 கோடியில் கட்டப்பட்ட கோட்டாட்சியா் அலுவலக கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, கோட்டாட்சியா் திருமால், நோ்முக உதவியாளா் ஜெயசீலன், நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, ஆத்மா குழுத் தலைவா் என். சதாசிவம்,வேளாண் கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குநா் வே. முருகையன், வட்டாட்சியா் திலகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.