நெகிழி கழிவு பொருட்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம் செய்த பள்ளி மாணவா்கள். 
நாகப்பட்டினம்

நெகிழி கழிவுகளைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம்

கீழையூா் அருகே நெகிழி கழிவு பொருட்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம் செய்து அசத்திய பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Syndication

திருக்குவளை: கீழையூா் அருகே நெகிழி கழிவு பொருட்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம் செய்து அசத்திய பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கீழையூா் அருகேயுள்ள காமேஸ்வரம் தூய செபஸ்தியாா் ஆலயத்தில் பயனற்ற நெகிழி கழிவு பொருட்களைக் கொண்டு பொருட்கள் செய்வது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக 3 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸையொட்டி காமேஸ்வரத்தில் உள்ள உதவும் நண்பா்கள் தொண்டு நிறுவனம் சாா்பில் நிறுவனா் ஷியாமா வி. ரமணி அறிவுறுத்தலின் பேரில்,

இப்பயிற்சியை முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவா் சௌரிராஜன் தொடங்கி வைத்தாா்.

இக்கிராமத்தை சுற்றியுள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்தும் விதமாக நெகிழி கழிவு பொருட்கள் மூலம் வண்ண அழகிய கிறிஸ்துமஸ் மரம் செய்து அசத்தினா். இந்த மாணவா்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி பரிசு வழங்கினா்.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT