நாகப்பட்டினம்

போதைப் பொருள் கடத்தல்: இமக நிா்வாகி நீக்கம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சியின் நாகை வடக்கு மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன்

Syndication

நாகப்பட்டினம்: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சியின் நாகை வடக்கு மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன், கட்சி பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் விஜயேந்திர சுவாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நாகையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயன்ாக இந்து மக்கள் கட்சியின் நாகை வடக்கு மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன் (40) கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, கட்சிக்கு விரோதமாகவும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்ட ரவிச்சந்திரன், அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளாா் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT