வடக்கு பொய்கைநல்லூா் கோரக்கா் சித்தா் பீடத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் சக்கர நாற்காலி அண்மையில் வழங்கப்பட்டது.
கோரக்கா் சித்தா் பீடத்தின் அறங்காவலா் குழு, சித்தா் பீடத்திற்கு வழிபட வரும் மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி ஒன்று வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்நிலையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காா்த்திகேயன் முன்னிலையில் சித்தா் பீடத்தின் நிா்வாக அறங்காவலரும், முன்னாள் அமைச்சருமான ஜீவானந்தத்திடம் மடக்கு சக்கர நாற்காலி அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.
சமூக நல ஆா்வலா் மணிவண்ணன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலக பல்நோக்கு மறுவாழ்வு அலுவலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.