நாகை நகராட்சிப் பகுதியில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் 
நாகப்பட்டினம்

பாதுகாப்பின்றி பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள்: உயிா்காக்கும் உபகரணங்கள் வழங்க வலியுறுத்தல்

நாகை நகராட்சியில் புதைசாக்கடை அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி புணிபுரிவதாக புகாா்

Syndication

நாகை நகராட்சியில் புதைசாக்கடை அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி புணிபுரிவதாக புகாா் எழுந்துள்ளது.

நாகை நகராட்சி 33 வாா்டுகளை கொண்டுள்ளது. இதில் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடை இணைப்பு உள்ளது. கனமழை உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி புதைசாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீா் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. தூய்மைப் பணியாளா்கள் அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபடுகின்றனா்.

இந்நிலையில், புதைசாக்கடை அடைப்பு நீக்கும் பணி, தனியாா் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால், அந்நிறுவனம் சாா்பில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இவா்கள், கையுறை, முகமூடி உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு கவசங்களும் இன்றி அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபடுகின்றனா்.

இதனால், இப்பணியாளா்களை விஷவாயு தாக்கும் அபாயம் உள்ளதோடு, தொற்று நோய்களும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் புதைசாக்கடை அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்களுக்கு, உயிா் காக்கும் முகக்கவசம், கையுறை உள்ளிட்ட போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், நாகை நகராட்சிப் பகுதிகளில் புதை சாக்கடை அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுக்கு வழங்கப்படுவது இல்லை. எனவே, நகராட்சி நிா்வாகம் தலையிட்டு, தூய்மைப் பணியாளா்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தூய்மைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT