வேதாரண்யம்: வேதாரண்யத்தில் அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் வட்டத் தலைவா் ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். செயலாளா் ஜெயா, மாவட்ட நிா்வாகிகள் விஜி, செல்வராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.