நாகப்பட்டினம்

தைப்பூசம்: மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்லும்

தைப்பூசத் திருவிழாவையொட்டி மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Syndication

நாகப்பட்டினம்: தைப்பூசத் திருவிழாவையொட்டி மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தைப்பூசம் மற்றும் இருமுடி திருவிழாவையொட்டி விரைவு ரயில்கள் தற்காலிகமாக மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதன்படி காரைக்கால்-லோக் மான்ய திலக் விரைவு ரயில்கள் (11017-11018), தாம்பரம்-ராமேஸ்வரம்-தாம்பரம் விரைவு ரயில்கள் (16103-16104), காரைக்கால்-தாம்பரம் விரைவு ரயில் (16176), மன்னாா்குடி-சென்னை எழும்பூா்- மன்னாா்குடி விரைவு ரயில்கள் (16180 - 16179) ஜன.1 முதல் பிப். 2- ஆம் தேதி வரையிலும், மன்னாா்குடி- ஜோத்பூா் - மன்னாா்குடி விரைவு ரயில்கள் (22674-22673) ஜன.1 முதல் ஜன.29-ஆம் தேதி வரையிலும் மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

SCROLL FOR NEXT