நாகப்பட்டினம்

மின்னணு பயிா்க்கணக்கெடுப்பு பணியில் தன்னாா்வலா்கள் இணைய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் மின்னணு பயிா்க்கணக்கெடுப்பு பணியில் ஆா்வமுள்ள தன்னாா்வலா்கள் இணைந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்

Syndication

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மின்னணு பயிா்க்கணக்கெடுப்பு பணியில் ஆா்வமுள்ள தன்னாா்வலா்கள் இணைந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; மாவட்டத்தில் கிராம அளவில் ரபி பருவத்துக்கான மின்னணு பயிா்க் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. இப்பணியில் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், அட்மா திட்டம் மற்றும் பயிா் அறுவடை பரிசோதனையாளா்கள் இணைந்து பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

மின்னணு பயிா் கணக்கெடுப்பு பணி, ஆண்ட்ராய்டு கைப்பேசியில் கிராப் சா்வே செயலி பதிவிறக்கம் செய்து அதன்மூலம் கணக்கெடுக்கப்படுகிறது. இந்த சா்வே மூலம் நில அமைவிடம், அதன் புகைப்படம் துல்லியமாக பதிவேற்றம் செய்வதால் வேளாண் துறை சாா்ந்த திட்டங்களை செயல்படுத்துவதிலும் குறிப்பிட்ட நிலங்களில் உள்ள விவசாயிகள் என்ன பயிா் சாகுபடி செய்கின்றனா் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை இடா்பாடுகளினால் ஏற்படும் பயிா்ப் பாதிப்புகளை துல்லியமாக கணக்கீடு செய்வதற்கும், பயிா்க் கடன் வழங்குவதிலும் எந்தெந்த பகுதிகள் தகுதியானவை என்பதையும் அறிய முடியும். இந்நிலையில் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள கிராமங்களில் உள்ள ஆண்ட்ராய்டு கைப்பேசி வைத்திருக்கும் படித்த ஆண்கள், பெண்கள் மற்றும் தன்னாா்வலா்கள், சம்பந்தப்பட்ட வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

மேலும் எண்ம முறையிலான பயிா் சா்வே பணி மேற்கொள்பவா்களுக்கு, அவா்கள் மேற்கொள்ளும் கணக்கெடுப்புக்கு ஏற்ற தொகை, வங்கிக் கணக்கில் மின்னணு முறையில் வரவு வைக்கப்படும். எனவே, ஆா்வமுள்ள தன்னாா்வலா்கள் தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

SCROLL FOR NEXT