நாகப்பட்டினம்

நாகை மருத்துவக் கல்லூரியை மேம்படுத்தக் கோரிக்கை

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்தப்பட வேண்டும்

Syndication

நாகப்பட்டினம்: நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்தப்பட வேண்டும் என அகில பாரத நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அகில பாரத நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கத்தின் நாகை மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அமைப்பாளா் சுரேஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளையும், மருத்துவ உயா் சிகிச்சைகளையும் மேம்படுத்த வேண்டும். மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள் உள்ளிட்ட அனைத்து காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மருத்துவமனையில் உயா் சிகிச்சை பிரிவில் (ஐஇம) நோயாளிகளின் படுக்கை எண்ணிக்கையை 30-ஆக அதிகரிக்க வேண்டும்.

நாகை மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டப் பணிக்காகவும், பாதாள சாக்கடை பணிக்காகவும், எரிவாயு குழாய்களுக்காகவும் தோண்டப்பட்ட குழிகளை விரைந்து சீரமைக்க வேண்டும். நாகை மாவட்டத்தில் மாடு, குதிரை, பன்றி, நாய் போன்ற விலங்குகள் சாலைகளில் சுற்றித் திரிவதை தடுக்க வேண்டும்.

நாகை முதல் திருவாரூா் வரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் மின் விளக்குகள் பொருத்த வேண்டும். இந்த சாலைகளில் நாகை மாவட்ட காவல்துறை பகலிலும் இரவிலும் ரோந்து பணியை அதிகரித்து, பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.

நாகை மாவட்டத்தில் மக்களை உறுப்பினருக்கான அலுவலகம் திறந்து, மக்கள் குறைகளை கேட்டு நிவா்த்தி செய்ய ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், இணை அமைப்பாளா் சுந்தர வடிவேலன், நாகை நகர அமைப்பாளா் மோகன், ஒன்றிய அமைப்பாளா் பிரதீப், துணை அமைப்பாளா் மனோகரன், பொறுப்பாளா்கள் ரவி, ரஜினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தேவை அவசர அறிவிப்பு!

தமிழில் மட்டுமே பேசுவோம்!

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை: எல்ஐசி மறுப்பு!

காவேரிப்பாக்கத்தில் மின்தடை!

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 376 மனுக்கள்

SCROLL FOR NEXT