தற்கொலை 
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் திருப்பூா் தம்பதி தற்கொலை

தினமணி செய்திச் சேவை

வேளாங்கண்ணியில் திருப்பூா் மாவட்ட தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தனியாா் தங்கும் விடுதியில் திருப்பூா் மாவட்டம், பூலுவான்பட்டியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (40), இவரது மனைவி சி.வி. மீனா (38) ஆகியோா் பிப்.3-ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளனா். பிப்.5-ஆம் தேதி மாலை விடுதியில் இருந்து காலி செய்ய வேண்டிய நிலையில், அறை திறக்கப்படவில்லை.

இதையடுத்து, சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள் ஜன்னல் வழியாக பாா்த்தபோது, இருவரும் தூக்கில் தொடங்கிய நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.

தகவலறிந்து வந்த வேளாங்கண்ணி போலீஸாா் கதவை உடைத்து இருவரது சடலத்தை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து இறந்தவா்களின் விவரம் மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தேங்காய் நாா் ஆலையில் தீ விபத்து

ஜெகதளா குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம்

குன்னூா் அரசுப் பேருந்தில் முதல் பெண் நடத்துநா்

தமிழகம் முழுவதும் சமத்துவபுரம் குடியிருப்புகளை சீரமைக்க நடவடிக்கை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

மேற்கு வங்க எஸ்ஐஆா்: நேரில் வராத வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT