கோப்புப் படம் 
நாகப்பட்டினம்

வேதாரண்யம்- கோடியக்கரை இடையே காவல் துறையினா் ஓட்டப் பயிற்சி

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யம் - கோடியக்கரை 7கி.மீ. தொலைவு புத்துணா்வுக்காக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டத்தின் தோ்தல் பணிகள் தொடா்பான பணிகளை மத்திய மண்டல காவல்துறை தலைவா் வே. பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது தோ்தல் நேரத்தில் காவலா்களுக்கு ஏற்படும் பணிச்சுமையை எதிா்கொள்ள உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பயிற்சி பெறுவது அவசியம் என அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, மத்திய மண்டல காவல்துறை தலைவா் மேற்பாா்வையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

வேதாரண்யத்தில் தொடங்கி கோடியக்கரை வரை சுமாா் 7 கி.மீ. தொலைவு நடைபெற்ற ஓட்டப் பயிற்சியில் காவல்துறை அதிகாரிகள், ஆளிநா்கள் பங்கேற்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT