வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த கதட்டூா் அரசு மேல் நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த பள்ளியில் 1990-91-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் 40 போ் பல்வேறு துறைகளில் பயணிக்கின்றனா். இவா்கள், தங்களது குடும்பத்தினருடன் இணைந்து தாங்கள் படித்த பள்ளி வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடினா்.
முன்னதாக, தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியா் வி. காசிநாதன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மாணவா்கள் அஞ்சலி செலுத்தினா்.
சந்திப்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவரான சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் முருகபாரதி வாய்மைநாதன் தலைமை வகித்தாா்.
பல்வேறு அமைப்புகளில் செயல்படும் பொறுப்பாளா்களான முன்னாள் மாணவா்கள் இ.கே.ராம், பூமிநாதன், தனபால், ஜெயமுருகன், ரமேஷ், சரவணன், ராஜேந்திரன், விமலா, சபாபதி, சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சந்திப்பில், எதிா்காலத்தில் பள்ளியின் வளா்ச்சிக்கு உதவுவது தொடா்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன.