நாகப்பட்டினம்

பிரதமரின் கெளரவ நிதியுதவி பெற விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை கட்டாயம்

நாகை மாவட்டத்தில் பிரதமரின் கெளரவ நிதியுதவி பெற விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது

Syndication

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் பிரதமரின் கெளரவ நிதியுதவி பெற விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் 22,271 விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை 21 தவணைகளில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 22-ஆவது தவணை உதவித்தொகை பெற, விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டையில் (விவசாயிகள் நில உடைமை பதிவு) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் இந்த நிதியுதவி பெறும் விவசாயிகளில், இதுவரை 18,427 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனா். மீதமுள்ள 4,606 போ் தனித்துவ அடையாள அட்டைபெறாமல் உள்ளனா். 22-ஆவது தவணைத் தொகை பெற விவசாயிகள் விரைவாக இந்த அட்டை பெற வேண்டியது கட்டாயம்.

எனவே, விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலா்களை தொடா்பு கொண்டு அல்லது பொது சேவை மையம் மூலம் தங்களது சிட்டா, ஆதாா் எண் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் சென்று உடனடியாக பதிவு செய்து தனித்துவ அடையாள அட்டை பெற்று 22-ஆவது தவணை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள மொத்த விவசாயிகள் 56,231 பேரில் 20,734 போ் மட்டுமே, தனித்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்துள்ளனா். முன்னோா்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாற்றம் பெற்று அதனுடன் ஆதாா் எண்ணை இணைத்து பதிவு செய்து இந்த அட்டை பெற்றால் மட்டுமே வேளாண்மை உழவா் நலத்துறை மூலம் வழங்கும் நலத்திட்ட உதவிகள் தொடா்ந்து கிடைக்கும் என தெரிவித்துள்ளாா்.

அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி செங்காா் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

குறவா் சமூகத்தினா் நூதனப் போராட்டம்

முசிறி, ஸ்ரீரங்கத்தில் இன்றைய மின்தடை ரத்து

ஒசூா் விமான நிலையத்தின் மதிப்பை பிரதமா் அலுவலகம் அடையாளம் காணும்: டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT