முகப்பு
காரைக்கால்

நெடுங்காடு அருகே முதியவர் சடலம் மீட்பு

காரைக்கால் பகுதி நெடுங்காடு  அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்கப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

காரைக்கால் பகுதி நெடுங்காடு  அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்கப்பட்டது.
நெடுங்காடு பகுதி நல்லாத்தூர் சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக, நெடுங்காடு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  உயிரிழந்தவர் 160 செ.மீ. உயரம், நீல நிற பச்சை கட்டம் போட்ட கைலி, காப்பி நிற அரைக்கை சட்டை அணிந்திருந்தார். இவரது வலது கண்ணம், வலது மார்புப் பகுதியில் மச்சம் உள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக நெடுங்காடு காவல் நிலையத்தை 04368- 261100 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்க காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →