காரைக்கால்

நவ. 17-இல் துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் குறைகேட்பு

DIN

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி காரைக்கால் மாவட்ட மக்களிடம் வெள்ளிக்கிழமை (நவ. 17) குறைகள்  கேட்கவுள்ளார் என மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
புதுச்சேரி துணை நிலை ஆளுநர்,  காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (நவ. 17)  மாலை 5  முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர்,  வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். புகார்களை எழுத்து வடிவில் அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT