முகப்பு
காரைக்கால்

துணைநிலை ஆளுநர் நாளை காணொலி மூலம் குறைகேட்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம்  வெள்ளிக்கிழமை  (அக்.13)  குறைகளைக் கேட்கவுள்ளதாக ஆட்சியர் ஆர்.கேசவன் கூறியுள்ளார்.

காரைக்கால்

துணைநிலை ஆளுநர் நாளை காணொலி மூலம் குறைகேட்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம்  வெள்ளிக்கிழமை  (அக்.13)  குறைகளைக் கேட்கவுள்ளதாக ஆட்சியர் ஆர்.கேசவன் கூறியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம்  வெள்ளிக்கிழமை  (அக்.13)  குறைகளைக் கேட்கவுள்ளதாக ஆட்சியர் ஆர்.கேசவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :  புதுச்சேரி துணைநிலை ஆளுநர்,   காரைக்கால் மாவட்ட மக்களிடம் குறைகளைக் காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை  மாலை 5  முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தக்  கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளைத்  தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், 13-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். புகார்களை எழுத்துவடிவில் அளிக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →