காரைக்கால்

சத்திரக் குளத்தை பாதுகாக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

DIN

பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சத்திரக் குளத்தை தனியார் ஆக்கிரமிக்க முயற்சிப்பதை தடுக்க வேண்டும் என, சத்திர குளம் பாதுகாப்புக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காரைக்கால் நகராட்சிப் பகுதிக்குள்பட்ட அக்கரைவட்டம் பகுதி காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் சத்திரக் குளம் உள்ளது. இக்குளத்தை சிலர் ஆக்கிரமிக்க முயன்றதை பல்வேறு அமைப்பினர் திரண்டு தடுத்துவிட்டனர். இந்த குளம் மக்களின் பயன்பாட்டில் இருந்துவருகிறது. குளத்தின் படிக்கட்டுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, குளத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT