காரைக்கால்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை மருத்துவ முகாம்

DIN

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில்  சனிக்கிழமை இருதயவியல், நரம்பியல்  மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :  காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் மாதமிரு சனிக்கிழமை  புதுச்சேரி ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறுகிறது.   18-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் முகாமில் இருதயவியல் மற்றும்  நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் முகாமை  பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT