வளாக நேர்காணலில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை
வளாக நேர்காணலில் தேர்வான காரைக்கால் மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகளுக்கு பணி நியமனை ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது.
வளாக நேர்காணலில் தேர்வான காரைக்கால் மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகளுக்கு பணி நியமனை ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது.
காரைக்கால்மேடு பகுதியில் செயல்பட்டு வரும் காரைக்கால் மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவை, அரிமா கிரீன் சிட்டி சங்கத்தை சேர்ந்த மகளிர் திறன் மேம்பாட்டுக்கான மண்டல ஒருங்கிணைப்பாளர் எல். டோரத்திமேரி லூயிஸ் தொடங்கிவைத்தார். நாகப்பட்டினத்தை சேர்ந்த விநோதினி மற்றும் காரைக்கால் மேடு கிராமப் பஞ்சாயத்தார்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மகளிர் தின சிறப்புரையாற்றினர்.
அண்மையில், கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயிலும் மாணவியர் 62 பேரை புதுச்சேரி மற்றும் சென்னையை சேர்ந்த பல நிறுவனங்கள் வளாக நேர்முகத் தேர்வு நடத்தி பணிக்குத் தேர்வு செய்தது. இவர்களுக்கு பணியாணையை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர். இக்கல்லூரியின் முன்னாள் மாணவியும், சென்னை பிரபல நிறுவனத்தில் பணியாற்றிவரும் எஸ். கனிமொழிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், கடந்த அக். 2017 தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்வான மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. 100 சதம் தேர்ச்சி ஏற்படுத்தியமைக்காக கல்லூரி விரிவுரையாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, கல்லூரி முதல்வர் ஆர். பாபுஅசோக் வரவேற்றார். பயிற்சி மற்றும் பணி வாய்ப்பு அலுவலர் ஆர். டெல்காஸ் நன்றி கூறினார்.