காரைக்கால்

பாலிடெக்னிக் மாணவர்கள் 20 பேருக்கு தனியார் நிறுவனத்தில் பணி வாய்ப்பு

DIN

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 20 பேருக்கு தனியார் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணலில் பணி வாய்ப்பு கிடைத்தது.
புதுச்சேரி அரசு சார்பு உயர்கல்வி நிறுவனமான காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் பல்வேறு துறையில் பயிலும் மாணவர்களுக்கு, நிறுவன வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரும் விதமாக வளாக நேர்காணலை கல்லூரி நிர்வாகம் ஆண்டுதோறும் நடத்திவருகிறது.  நிகழாண்டு, புதுச்சேரியிலிருந்து மதர்சன் சின்டர் மெட்டல் டெக்னாலஜி நிறுவனத்திலிருந்து மனிதவள தலைமை அதிகாரி எம்.கண்ணன், முதுநிலை மேலாளர் டி.ரவிச்சந்திரன் ஆகியோர், தங்களது நிறுவனத்தில் பணி வழங்கும் வகையில் இறுதியாண்டு மாணவர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய முன்வந்தனர்.
இந்த வளாக நேர்காணலுக்கு  கல்லூரி முதல்வர் டி. சந்தனசாமி தலைமை வகித்து, கல்லூரியில் உள்ள பல்வேறு பாடப் பிரிவுகள் குறித்தும், மாணவர்களின் திறன் குறித்தும் விளக்கிப் பேசினார்.
நிறுவன அதிகாரிகள், தங்களது நிறுவனத்தில் உள்ள பணி நிலவரம் குறித்தும், தேர்வு செய்யப்படுவோருக்கு பிற்கால நலன்கள் குறித்தும், நிறுவன விதிமுறைகள் குறித்தும் விளக்கினர். நிறுவனத்தின் சார்பில் கல்லூரியில் மெக்கானிக்கல் மற்றும் எலக்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் மாணவர்களிடையே எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. பின்னர், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டத்தில், 20 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. மாணவர்கள் கல்வி முடித்து நிறுவனத்தில் சேரும்போது மாதம் ரூ.10,500 ஊதியம் தரப்படும் பின்னர் படியாக ஊதியம் உயர்த்தப்படும் என அந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT