முகப்பு
காரைக்கால்

ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினர்  கொண்டாட்டம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மரியாதையும், பல்வேறு

Updated On : 25 பிப்ரவரி 2019, 6:30 am IST
பகிர்:

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மரியாதையும், பல்வேறு இடங்களில் அன்னதானம், இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.
காரைக்கால் மாவட்டச் செயலர் எம்.வி. ஓமலிங்கம் தலைமையில், அதிமுக நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்தனர். 
புதிய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைத்திருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாவட்டச் செயலர் எம். ஓமலிங்கம், சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் வி.கே.கணபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, தமிழக அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வாயிலில் அதிமுக கொடியேற்றப்பட்டது. இதேபோல், மாவட்டத்தில் 25 -க்கும் மேற்பட்ட இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 
காரைக்கால் தெற்குத் தொகுதிக்குள்பட்ட பள்ளிவாசல் அருகே அதிமுக சார்பில் அன்னதானம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலர் எம்.ஓமலிங்கம், சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளர் எச்.எம்.ஏ. காதர், இணைச் செயலர்கள் ஆரிபு, கே.ஜீவானந்தம் மற்றும் ஏ.எம்.கே.பாலு மற்றும் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல், காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமமுக மாவட்டச் செயலர் ஜி.வி.ஜெயபால் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.