காரைக்கால்

தமிழகத்துக்கு கடத்த முயன்ற 300 லிட்டர் சாராயம் பறிமுதல்: 4 பேர் கைது

DIN


காரைக்காலில் இருந்து தமிழகத்துக்கு மோட்டார் சைக்கிளில் 300 லிட்டர் சாராயத்தைக் கடத்த முயன்ற நால்வரை போலீஸார் கைது செய்தனர். 
தற்போது தேர்தல் காலமாக உள்ளதால், காரைக்காலில் இருந்து சாராயம் உள்ளிட்ட மதுபானங்களை தமிழகத்துக்கு கடத்துவது அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த காவல்துறையுடன் இணைந்து தேர்தல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையில் உள்ள சிறப்புக் காவல் படையினர், பறக்கும் படையின் உதவி ஆய்வாளர் பிரவீன், உதவி ஆய்வாளர் குமரவேல் உள்ளிட்டோரை கொண்ட குழுவினர்  தீவிர கண்காணிப்பில் மாவட்ட அளவில் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டுச்சேரி கொம்யூன், கொன்னக்காவலி தமிழக எல்லையோரப் பகுதியிலிருந்து மதுபானம் கடத்தல் நடப்பதாக தகவல் கிடைத்ததையொட்டி, இக்குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, 3 மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டைகளை வைத்து நான்கு பேர் கட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்த போலீஸார், அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அதில் 300 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் இருந்ததும், அவற்றை தமிழக பகுதிக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீஸார், வரிச்சிக்குடிபேட்டைச் சேர்ந்த ஜேசுதாஸ், சதீஷ், தமிழ்ச்செல்வன், செருமாவிலங்கையைச் சேர்ந்த செல்வம் ஆகிய நால்வரையும் கைது செய்து காரைக்கால் கலால்
துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT