காரைக்கால்

அட்சய திருதியை கருட வாகனத்தில் பெருமாள் இன்று புறப்பாடு

DIN

அட்சய திருதியை நாளையொட்டி, காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கருட வாகனத்தில்  செவ்வாய்க்கிழமை (மே 7) வீதியுலாவுக்கு எழுந்தருளுகிறார்.
அட்சய திருதியை நாளில் மக்கள் தங்க ஆபரணங்கள் வாங்குவதும், பெருமாள் கோயில்களில் வழிபாடு நடத்துவதும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். இந்நாளையொட்டி, காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவையாக கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் நித்யகல்யாணப் பெருமாள் பெரிய மாட வீதிக்கு காலை 6.30 மணிக்கு எழுந்தருளவுள்ளார். இதேபோல், காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை நடைபெறுகிறது. அடுத்து, திருமலைராயன்பட்டினத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள், ரகுநாத பெருமாள், வீழிவரதராஜ பெருமாள் கோயிலிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT