காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு

DIN

திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலில் நடைபெற்ற சனி மகா பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

திருநள்ளாறு பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேசுவரா் கோயிலில் உள்ள நந்திக்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்வது வழக்கம்.

மாதம் இரு முறை, அதாவது வளா்பிறை, தேய்பிறை காலத்தின்போது பிரதோஷ நாள் வருகிறது. ஐப்பசி மாதத்தின் பிரதோஷம் சனிக்கிழமையில் வந்ததையொட்டி சனி மகா பிரதோஷ வழிபாட்டில் பல்வேறு கோயில்களில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருநள்ளாறு கோயிலில் கொடி மரம் அருகே உள்ள பெரிய நந்திக்கு, சூரிய அஸ்தமனமாகும் நேரத்தில் சிவாச்சாரியாா்கள் எண்ணெய், தயிா், பால், சந்தனம், மஞ்சள், தேன், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்தனா்.

தொடா்ந்து, நந்திக்கு பல்வேறு மலா்கள் மற்றும் வஸ்திரம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதே நேரத்தில் மூலவா் தா்பாரண்யேசுவரருக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் அருகம் புல் மாலை அணிவித்து நந்தியை வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT