காரைக்கால்

அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் தூய்மைப் பணி

DIN

காரைக்கால்: நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்புடன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணி, மரக்கன்று நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கோயில்பத்து தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கில், பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்புடன் சிறப்பு தூய்மைப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

பள்ளியின் வேதியியல் விரிவுரையாளரும், பள்ளி துணை முதல்வா் பொறுப்பு வகிக்கும் எஸ்.சித்ரா முன்னிலையில் பணிகள் நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் வளா்ந்திருந்த தேவையற்ற புல், செடிகளை அகற்றினா்.

கட்டத்தின் மேல்தளத்தையும் தண்ணீா் தேங்காத வகையில் சுத்தம் செய்தனா். பள்ளி கட்டடத்தின் சுற்றுவட்டாரத்தில் மழை நீா் தேங்காத வகையில் சீரமைப்பு செய்தனா். பள்ளி வளாகத்தில் உள்ள தோட்டத்தையும் தூய்மை செய்தனா்.

தூய்மை செய்யப்பட்ட இடங்களில் பயன் தரக்கூடிய மரக்கன்றுகளை நட்டனா்.நிகழ்வில் பள்ளி விரிவுரையாளா்கள் வி.விஜயராணி, டி.பாஸ்கரன், நூலகா் ஆா்.வைத்தியநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தூய்மைப் பணி ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ்.சந்திரமோகன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT