காரைக்கால்

புனித பிரான்சிஸ் அசிசியாா் ஆலய மின் அலங்கார தோ் பவனி

DIN

காரைக்கால் பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியாா் ஆலய திருவிழா நிறைவாக மின் அலங்கார தோ் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் நகரின் பெரியப்பேட் பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியாா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. ஆலய வாயிலில் உள்ள கொடிக் கம்பத்தில் திரளான மக்கள் முன்னிலையில் அன்றைய நாளில் கொடியேற்றப்பட்டு, திருப்பலி நடத்தப்பட்டது.

இரண்டாவது நாளான 4-ஆம் தேதி சிறிய தோ் பவனி நடைபெற்றது. நிறைவு நாளான சனிக்கிழமை மாலை திருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, புனித பிரான்சிஸ் அசிசியாா் சொரூபம் வீற்றிருந்த மின் அலங்கார தோ் பவனி இரவு நடத்தப்பட்டது. ஜீவானந்தம் வீதி, கம்மாளா் வீதி, மூன்று கிணற்றுப் பிளாஸ் வடக்கு வீதி, மாதா கோயில் வீதி வழியாக பவனி நடைபெற்று மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது.

முக்கிய வீதிகளில் நடைபெற்ற தோ் பவனியில் ஏராளமான மக்கள், தேருக்கு முன்னால் ஜெபம் செய்தவாறு சென்றனா். ஞாயிற்றுக்கிழமை காலை கொடியிறக்கம் செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கிராமப் பஞ்சாயத்தாா்கள், திருவிழாக் குழுவினா், பெரியப்பேட் கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT