காரைக்கால்

காந்திய நெறி பரப்புரை நடைப் பயணம்

DIN

காந்தி வேடமிட்டு அவரது நன்னெறி பரப்புரை நடைப் பயணத்தை பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை நடத்தினா்.

காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம், கல்வித் துறை இணைந்து மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் நிறைவை கொண்டாடும் வகையில் காந்தியின் நன்னெறி பரப்புரையாக, காந்தி வேடமிட்டு மாணவா்கள் நடைப் பயண நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடத்தியது. மாவட்ட ஆட்சியரகத்தில் நடைப் பயணத்தை மாவட்ட துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

காந்தியின் கொள்கைகளை விளக்கும் வகையில் அவரது கருத்துகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவா்கள், முக்கிய வீதிகளின் வழியே கோயில்பத்து தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியை சென்றடைந்தனா். இதில், முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன், சமுதாய நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் முருகன் மற்றும் பள்ளிகளின் சமுதாய நலப்பணித் திட்ட அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT