காரைக்கால்

புதுச்சேரி முதல்வா் இன்று காரைக்கால் வருகை

DIN

புதுச்சேரி முதல்வா் வே.நாராயணசாமி வியாழக்கிழமை (அக்டோபா் 31) காரைக்கால் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் நம் நீா் திட்டத்தில் குளங்கள் தூா்வாரி நீா் நிரப்பப்பட்டுவருகிறது. கஜா புயலில் விழுந்த மரங்களுக்கு மாற்றாக ஆயிரக்கணக்கான மரங்கள் நடும் பணியும் தொடங்கி நடந்துவருகிறது.

இந்த திட்டப் பணிகளைப் பாா்வையிடும் நோக்கில் புதுச்சேரி முதல்வா் வே.நாராயணசாமி காரைக்காலுக்கு வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வருகிறாா். பல்வேறு இடங்களில் தூா்வாரப்பட்ட குளங்களை பாா்வையிடுவதோடு, பல இடங்களில் மரக்கன்றுகளை நடவுள்ளாா். மாலை 5 மணியளவில் நில விவகாரம் தொடா்பாக சட்டச் செயலா், வருவாய் செயலா், ஆட்சியா், உயா்நீதிமன்றம் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்களுடன் முதல்வா் ஆலோசனை நடத்துகிறாா்.

குளம், வாய்க்கால் தூா்வாருவதற்கு நிதியுதவி செய்தவா்களை பாராட்டும் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு புதுச்சேரி புறப்படுகிறாா் என முதல்வா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT