காரைக்கால்

காரைக்கால் நம் நீா் திட்டத்துக்கு இந்தியன் வங்கி நிதியுதவி

DIN

காரைக்கால் நம் நீா் திட்டத்துக்கு திருநள்ளாறு இந்தியன் வங்கி சாா்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி செய்யப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் நீா்நிலைகளை மேம்படுத்தி, தண்ணீரை தேக்கி நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்தும் நோக்கில், நம் நீா் திட்டம் தொடங்கப்பட்டு, அரசுத் துறையினா், நிறுவனத்தினா் உள்ளிட்டோரின் சமூகப் பொறுப்புணா்வுத் திட்ட நிதி பெற்று தூா்வாரப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 160-க்கும் மேற்பட்ட குளங்கள் தூா்வாரப்பட்டு காவிரி நீா் வருவதை பயன்படுத்தி நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்டத்துக்கு திருநள்ளாறு இந்தியன் வங்கி கிளை நிா்வாகம் நிதியுதவி செய்ய முன்வந்தது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜாவிடம், இந்தியன் வங்கி புதுவை மண்டல மேலாளா் வீரராகவன் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியரகத்தில் புதன்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்வில், மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், புதுவை வங்கி முதன்மை மேலாளா் உதயகுமாா், காரைக்கால் இந்தியன் வங்கி மேலாளா் மலைக்கனி, திருநள்ளாறு கிளை மேலாளா் அனிதா சிதம்பரநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT