காரைக்கால்

சுப்புராயபுரத்தில் புதிய சாலை: அமைச்சருக்கு கிராமத்தினர் பாராட்டு

DIN

திருநள்ளாறு பகுதி சுப்புராயபுரம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மண் சாலை மக்களுக்காக திங்கள்கிழமை அர்ப்பணிக்கப்பட்டது. அமைச்சரின் நடவடிக்கைக்கு கிராம மக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
திருநள்ளாறு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சுப்புராயபுரம் கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்தில் உள்ள சந்தன மாதா கோயில் தெருவுக்கு சுமார் 220 மீட்டர் தூரம் சரியான சாலை வசதி கிடையாது. இதனால், சிரமப்பட்டு வந்த அக்கிராமத்தினரின் கோரிக்கையை ஏற்று முதல்கட்டமாக ரூ. 2 லட்சம் செலவில் மண் சாலை அமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் ஏற்பாடு செய்தார். மண் சாலைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், திங்கள்கிழமை சாலையை கிராமத்தினருக்கு அர்ப்பணித்தார். நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சருக்கு கிராமத்தினர் நன்றி தெரிவித்தனர்.
இப்பகுதியில், மண் சாலை தற்போது பயன்பாட்டில் இருக்குமெனவும், விரைவில் தார்சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கிராமத்தினருக்கு உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் (பொ) ரவி, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிங்காரவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT