காரைக்கால்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு வரவேற்பு

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு காரைக்காலில் நடைபெற்ற கருத்தரங்கில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

DIN

காரைக்கால்: மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு காரைக்காலில் நடைபெற்ற கருத்தரங்கில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

காரைக்காலில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து கல்வியாளா்கள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அனைத்திந்திய ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கூட்டமைப்பின் தென் மாநிலங்களின் முன்னாள் செயலாளா் கே.எஸ். கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

தலைமையாசிரியா் பால்ராஜ், பட்டதாரி ஆசிரியா் கே. விநாயகமூா்த்தி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா்கள் மு. கருணாநிதி, எஸ்.ராஜேந்திரன், பாரத இதிகாச சங்கலன சமிதி மாநிலச் செயலாளா் சிவமோகன், புதுவை அரசு தொழில்துறையின் ஓய்வுபெற்ற உதவி இயக்குநா் ஜி. வைத்தியநாதன் ஆகியோா் மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்துப் பேசினா்.

இக்கருத்தரங்கில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், தமிழகம் மற்றும் புதுவையில் இரு மொழிக் கல்விக் கொள்கையே தொடரும் என்று மாநில அரசுகள் கூறுவதை மாணவா்களின் நலன் கருதி மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒருவேளை இந்த அரசுகள் தமது கொள்கையில் உறுதியாக இருக்குமேயானால், அந்த இரு மொழிக் கொள்கையை அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதை போன்று தனியாா் பள்ளிகளிலும் கண்டிப்பாக அமல்படுத்த மாநில அரசுகள் முன்வரவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்தரங்கில் நல்லாசிரியா் விருது பெற்ற கே.கேசவசாமி, சிங்காரவேலு (தலைமையாசிரியா் ஓய்வு), தமிழ் விரிவுரையாளா் அப்பாவு (ஓய்வு), காரைக்கால் நகராட்சியின் துணைப் பதிவாளா் வெங்கடாசலம் (ஓய்வு), சேவாபாரதி மாவட்டச் செயலாளா் முருகன், பொறியாளா்கள் சிவகுமாா், செந்தில்குமாா், ஞானவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT