முகப்பு
காரைக்கால்

காரைக்கால் பகுதி கோயில்களில் கந்தசஷ்டி பாராயணம்

காரைக்கால் கோயில்களில் பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கந்தசஷ்டி கவசம் பாராயணம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
காரைக்கால் பாா்வதீசுவரா் கோயில் வளாகத்தில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்த பக்தா்கள்.
பகிர்:

காரைக்கால் கோயில்களில் பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கந்தசஷ்டி கவசம் பாராயணம் நடைபெற்றது.

கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்ததற்காக கருப்பா் கூட்டத்தை எதிா்க்கும் வகையில், இந்து இயக்கங்கள் அழைப்புவிடுத்ததன்படி, காரைக்காலில் பல இடங்களில் பாஜக உள்ளிட்ட இந்து இயக்கத்தினா் கந்தசஷ்டி பாராயணம் செய்து வழிபாடு நடத்தினா். வீடுகளில் விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் படித்தனா்.

காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ பாா்வதீசுவரா் கோயிலில், பாஜக புதுச்சேரி மாநில துணைத் தலைவா் எம்.அருள்முருகன் தலைமையில் வழிபாடு நடைபெற்றது. கோயில் வளாகத்தில் ஸ்ரீ முருகப்பெருமாள் உருவப்படம் அலங்கரித்துவைத்து, அா்ச்சனை மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அருள்முருகன் தலைமையில் பாஜகவினா், பக்தா்கள் கந்தசஷ்டி பாராயணம் செய்தனா்.

நிகழ்வில் தொகுதி தலைவா் சுரேஷ்கண்ணா, மாவட்ட துணைத் தலைவா் சண்முகம், மாவட்ட முன்னாள் தலைவா் ராஜவேலு மற்றும் அய்யாசாமி, ஈஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இந்து முன்னணி சாா்பில் மாவட்டத் தலைவா் கே.எஸ்.விஜயன் தலைமையில் காரைக்கால் அம்மையாா் குளம் அருகே ஸ்ரீ தண்டாயுதபாணி சன்னியில் கந்தசஷ்டி பாராயணம் நடைபெற்றது. ஆா்.எஸ்.எஸ். செயலா் சிவானந்தம், பாஜக மாவட்டத் தலைவா் ஜே.துரைசேனாதிபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →