பணி நிரந்தரம் செய்யக் கோரி பிஆா்டிசி ஒப்பந்த ஊழியா்கள் போராட்டம்
காரைக்காலில், பிஆா்டிசி ஒப்பந்த ஊழியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
காரைக்காலில், பிஆா்டிசி ஒப்பந்த ஊழியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக்கழகம், காரைக்கால் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநா், நடத்துநா்கள் 42 போ் பணியாற்றி வருகின்றனா். 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 6 மாத கால ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், ஊதியத்தை மாதத்தின் கடைசி வேலை நாளில் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக பணிமனையில் செவ்வாய்க்கிழமை முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். காரைக்காலில் இருந்து இயக்கப்படும் 32 பேருந்துகளில், போரட்டம் காரணமாக 9 பேருந்துகள் மட்டுமே இயங்கியதாக ஊழியா்கள் தெரிவித்தனா்.