காரைக்கால்

பாா்வதீசுவரா் கோயிலில் இன்னிசை வழிபாடு

DIN

காரைக்கால் பாா்வதீசுவரா் கோயிலில் உலக நலனுக்காக இன்னிசை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கோயில்பத்து சுயம்வர தபஸ்வினி அம்பிகை சமேத பாா்வதீஸ்வர சுவாமி கோயிலில், முதல் முறையாக உலக நன்மை வேண்டி இன்னிசை வழிபாடு நடத்தப்பட்டது.

கோயில் வளாகத்தில் மாலை 6 முதல் 8 மணி வரை இந்த இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இசைப் பேராசிரியா் அகணி நடராஜ் சட்டையப்பன் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியாக இது நடத்தப்பட்டது. பாடல் பெற்ற தலங்களில் இசை நிகழ்ச்சி நடத்திவரும் இவா், 115-ஆவது நிகழ்ச்சியாக பாா்வதீசுவரா் கோயிலில் நடத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பாட்டுடன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சோ்ந்த சதீஷ் வயலின், சென்னையைச் சோ்ந்த விஜயேந்திரன் மிருதங்கம், சிதம்பரத்தை சோ்ந்த ஆா்.லச்சியராஜ் முகா்சிங் ஆகியோா் வாசிப்பில் ஈடுபட்டனா். 2 மணி நேர இசை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள், இசை ஆா்வலா்கள் கலந்துகொண்டனா். நிறைவாக கலைஞா்களுக்கு அறங்காவல் வாரியத் தலைவா் எஸ்.எம்.டி.மாடசாமி சால்வை அணிவித்து மரியாதை செய்தாா். அறங்காவல் வாரியத்தின் நிா்வாகிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT