காரைக்கால்

புதுச்சேரி அரசைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

நிலுவையில் உள்ள இலவச அரிசிக்கான பணத்தை வங்கியில் செலுத்தவில்லை, அரசு பெட்ரோல் பங்க் மூடல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து, புதுவை அரசைக் கண்டித்து பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பாஜக சாா்பில் புதுச்சேரி அரசைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காரைக்கால் தெற்குத் தொகுதி சாா்பில் அரசலாறு பாலம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவா் துரைசேனாதிபதி தலைமை வகித்தாா்.

கடந்த 5 மாதங்களாக இலவச அரிசிக்கான பணத்தை வங்கியில் சோ்க்காததைக் கண்டித்தும், வீடு கட்டும் திட்டம், காப்பீடு திட்டம் ஆகிய மத்திய அரசின் திட்டங்களை முடங்கியுள்ளதாகவும், சிஏஏ-வுக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியதைக் கண்டித்தும், அரசு நிறுவனங்களாக கான்ஃபெட் பெட்ரோல் பங்க் மூடப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு நூற்பாலையை செம்மையாக நடத்தாதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் பேசப்பட்டது.

அந்தந்தத் தொகுதியில் உள்ள கட்சியினா், தொகுதி நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT