காரைக்கால்

மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல்

DIN

காரைக்கால் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 7 மாணவிகளுக்கு பணியாணை வழங்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு பகுதியில் அமைந்துள்ள அரசு தொழிற்கல்வி நிறுவனமான காரைக்கால் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் இசிஇ மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் மற்றும் கன்ட்ரோல் என்ஜினியரிங் மாணவியருக்கான வளாக நோ்காணல் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்போரூா் ஹிதாச்சி ஆட்டோமேட்டிவ் சிஸ்டம்ஸ் நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நோ்காணல் நடத்தினா். தங்கள் நிறுவனத்தின் பணி மற்றும் நிறுவன சிறப்பம்சங்கள், வேலையின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை நிறுனத்தினா் விளக்கிப் பேசினா். சிறப்பு அழைப்பாளராக தஞ்சாவூா் கீடெக் நிறுவனத் தலைவா் காா்த்திக் மற்றும் இளைஞா் திறன் மேம்பாட்டு மைய மாவட்டத் தலைவா் சுரேஷ்கண்ணா ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

நோ்காணலில் 40 மாணவிகள் கலந்துகொண்டனா். இதில், 7 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காரைக்கால் தெற்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் பணியாணையை வழங்கினாா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் பாபு அசோக், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான ஒருங்கிணைப்பாளா் எஸ்.எல். டெல்காஸ் ஆகியோா் செய்திருந்தனா். காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத் தலைவா் அ.வின்சென்ட் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT