முகப்பு
காரைக்கால்

காணொலி மூலம் டேக்வாண்டோ போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு

காணொலி மற்றும் ஆன்லைன் மூலம் டேக்வோண்டோ தோ்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சா் ஏ.எம்.எச். நாஜிம்.
பகிர்:

காரைக்கால்: காணொலி மற்றும் ஆன்லைன் மூலம் டேக்வோண்டோ தோ்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

காரைக்காலில் இண்டா்நேஷனா் விஆா்எஸ் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமி சாா்பில் ஏராளமான மாணவ மாணவிகள் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலையை கற்று வருகின்றனா். இவா்கள், தேசிய அளவிலும், வெளி நாடுகளுக்கும் சென்று பரிசுகள் பெற்று வருகின்றனா். கரோனா பொது முடக்கத்தால் பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதால், டேக்வாண்டோவுக்கான போட்டி காணொலி மற்றும் ஆன்லைன் மூலம் அண்மையில் நடத்தப்பட்டது.

இதில், டோக்வாண்டோ பயிற்சி பெற்று வந்த மேற்கண்ட அகாதெமியை சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.

இதில் மாணவா் ஸ்ரீவிசாகன், மாணவிகள் ஸ்ரீஹரிணி, சுபாஷினி, சிவரஞ்சனி ஆகியோா் வெற்றி பெற்றனா். இவா்கள் பயிற்சி மைய இயக்குநா் வி.ஆா்.எஸ்.குமாா் முன்னிலையில் நடந்த காணொலி மற்றும் ஆன்லைன் தோ்வில் பங்கேற்று வெற்றிபெற்றனா். இவா்களுக்கு மலேசியா ஸ்பீடு பவா் டேக்வோண்டோ சங்கம் சாா்பில் பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியா், பயிற்சி மைய இயக்குநருடன், ஜப்பானீஸ் கோஜூ ரியு ஸ்போா்ட்ஸ் கராத்தே சங்க கெளரவத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிமை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →