முகப்பு
இந்தியா

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

கருத்துக்கணிப்புகள் பற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி...

Updated On : 30 ஏப்ரல், 2026 at 4:13 PM
மல்லிகார்ஜுன கார்கே - IANS
பகிர்:

தமிழகத்தில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும் கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்துப் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நேற்று(ஏப். 29) தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில்,

Advertisement

"சில இடங்களில் முடிவுகள் தெளிவாகத் தென்படுகின்றன. சில இடங்களில் முடிவுகள் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், என் கணிப்பின்படி, தமிழ்நாட்டில் திமுகவிற்குத் தெளிவான பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து நான் அங்கேயும் பேசியுள்ளேன்.

அதேபோன்று கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எங்கள் கட்சியினர் என்னிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தில் நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையிலான இடங்கள் கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், அவர்கள் சுட்டிக்காட்டும் எண்ணிக்கையைவிட அதிகமான இடங்கள் எங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அதேபோல புதுச்சேரியைப் பொருத்தவரை, பாஜக மற்றும் என்.ஆர். காங்கிரஸுக்கு எதிராக சமபலத்துடன் கூடிய ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். அங்கும் எங்களுடைய வெற்றிக்கான எதிர்பார்ப்புகள் உள்ளன. இருப்பினும் புதுச்சேரியில் போட்டி மிகவும் கடுமையாக உள்ளது. இன்னும் இரண்டு நாள்கள் பொறுத்திருந்து முடிவுகளைப் பார்க்கலாம்.

மேற்கு வங்காளம் குறித்த கருத்துக்கணிப்புகளின்படி, அங்கு இரு தரப்புக்கும் இடையே மிகக் கடுமையான சமபலத்திலான போட்டி நிலவுகிறது. எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, திரிணமூல் காங்கிரஸ் அங்கு முன்னிலையில் உள்ளது.

அதேபோல பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து மக்களை அச்சுறுத்துவது, ஒடுக்குமுறையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்களுக்கு எதிராக மத்திய ரிசர்வ் காவல் படையைப் பயன்படுத்தி, மமதா தலைமையிலான திரிணமூல் கட்சிக்கு கடுமையான சவாலை ஏற்படுத்த அவர்கள் முயன்று வருகின்றனர்" என்று கூறினார்.

summary

Congress President Mallikarjun Kharge says On the exit polls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.